பவானி கதாபாத்திரம் என்னை கவர்ந்தது – சூப்பர் ஸ்டார் ஓபன் டாக்..!
மாஸ்டர் படத்தை பார்த்துவிட்டு தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி விஜய் சேதுபதியை புகழ்ந்து கூறியுள்ளார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்து வருகிறது. இந்த படத்தினை வீட்டிலிருந்தே பார்க்கும் வகையில் அண்மையில் ஓடிடி தளமான அமேசான் பிரேமில் வெளியாகி அங்கையும் மக்களின் அதிகப்படியான வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தை பார்த்துவிட்டு பல பிரபலங்கள் படத்தை புகழ்ந்து கூறி வருகிறார்கள் அந்த வகையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி உப்பனா என்ற தெலுங்கு படத்தின் அறிமுக விழாவில் பேசினார். இதில் விஜய்சேதுபதி பற்றி புகழ்ந்து கூறியுள்ளார்.
இதில் சிரஞ்சீவி பேசியது, ” கதாநாயகனாக நடிப்பதை விட கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பதில் இந்திய அளவில் சிறந்து விளங்கும் நடிகர் விஜய் சேதுபதி. நான் பார்த்த மாஸ்டர் படத்தில் நாயகனை விட வில்லனாக பவானி கதாபாத்திரத்தில் நடித்த விஜய் சேதுபதி என்னை மிகவும் கவர்ந்தார். விஜய் சேதுபதிக்கு ஜார்ஜியா மற்றும் வெளிநாடுகளில் அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றும் பாராட்டியுள்ளார்.
அதனை தொடர்ந்து பேசிய சிரஞ்சீவி, உப்பனா படத்தில் விஜய சேதுபதியை ஒப்பந்தம் செய்தது மே படம் வெற்றி பெற்றுவிட்டதாக நினைத்தேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் விஜய் சேதுபதி தெலுங்கில் ஏற்கனவே நடிகர் சிரஞ்சீவியுடன் சாய்ராம் நரசிம்ம ரெட்டி என்ற திரைப்படத்தில் துணை நடிகராக இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.