முதல் இன்னிங்ஸில் 555 ரன்கள் குவித்த இங்கிலாந்து..!

முதல் இன்னிங்ஸில் 2-வது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 555 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து, தொடக்க வீரர்களாக ரோரி பர்ன்ஸ், டொமினிக் சிப்லே இருவரும் இறங்கினர்.

நிதானமாக விளையாடிய ரோரி பர்ன்ஸ் 33 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர், இறங்கிய லாரண்ஸ் வந்த வேகத்தில் 5 பந்துகளை மட்டுமே சந்தித்து ரன் எடுக்காமல் வெளியேறினார். அதன் பின்னர் கேப்டன் ஜோ ரூட், டொமினிக் சிப்லே இருவரும் அதிரடியாகவும், நிதானமாகவும் விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.

சிறப்பாக விளையாடி விளையாடி வந்த டொமினிக் சிப்லே சதம் அடிக்காமல் 87 ரன்னில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இவர்கள் இருவரின் கூட்டணியில் 200 ரன்கள் குவித்தனர். இறுதியாக முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 89.3 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழந்து 263 ரன்கள் எடுத்த நிலையில், இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை இங்கிலாந்து தொடங்கியது.

பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட் இருவரும் சேர்ந்து அதிரடியாக விளையாடினர். இவர்களின் விக்கெட்டை பறிக்கமுடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் திணறிய நிலையில், 82 ரன்கள் எடுத்து பென் ஸ்டோக்ஸ்  விக்கெட்டை இழந்தார். ஆட்டம் தொடங்கத்திலே இருந்து அதிரடி காட்டி வந்த கேப்டன் ஜோ ரூட்  இரட்டை சதம் விளாசி 218 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இதைத்தொடர்ந்து, ஜோஸ் பட்லர் 30, ஒல்லி போப் 34 ரன்கள் எடுக்க  இறுதியாக இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 2-வது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 555 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியில் பும்ரா, ஷாபாஸ் நதீம்,அஸ்வின் மற்றும் இஷாந்த் சர்மா தலா 2 விக்கெட்டை பறித்தனர்.

author avatar
murugan