இந்த மெகா ஹிட் படத்திற்கு சம்பளமே வாங்கலையாம் தல .! இயக்குனர் கூறிய தகவல்.!
தல அஜித் நடிப்பில் உருவாகி வெற்றி பெற்ற அமர்க்களம் திரைப்படத்திற்கு தல அஜித் சம்பளம் வாங்கவில்லை என்று இயக்குனர் வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் தல அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார் .இதன் அப்டேட்க்காக ரசிகர்கள் கிடையாய் கிடக்கின்றனர்.இந்த நிலையில் இவரது திரைப்பயண வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை தேடி கொடுத்த திரைப்படம் தான் அமர்க்களம்.
இந்த திரைப்படம் குறித்த யாரும் அறியாத தகவலை அமர்க்களம் பட இயக்குனரான சரண் பகிர்ந்துள்ளார்.சமீபத்தில் அளித்த பேட்டியில் சரண் கூறியதாவது , ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்ற அமர்க்களம் திரைப்படத்திற்கு தல அஜித் சம்பளம் எதுவும் வாங்கவில்லை என்றும் , சம்பளம் வாங்காமல் தான் படம் முழுவதையும் தல அஜித் நடித்து கொடுத்தார் என்றும் வெளிப்படுத்தியுள்ளார் .