ரஜினிகாந்த் தேர்தலில் யாருக்கும் ஆதரவு அளிக்க மாட்டார்…!
ரஜினிகாந்த் இந்த சட்டமன்ற தேர்தலுக்கு 100% வரமாட்டார். தேர்தலில் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு அளிக்க மாட்டார்.
இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் தற்போது பரபரப்பாக காணப்படுகிறது. இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் கட்சி தொடங்கப் போவதாக கூறியிருந்தார். பின் தனது உடல்நிலை காரணமாக மீண்டும் கட்சி தொடங்கவில்லை என அறிவிப்பு வெளியிட்டார்.
தற்போது ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகியான சுதாகர் அவர்கள் கூறுகையில், ரஜினிகாந்த் இந்த சட்டமன்ற தேர்தலுக்கு 100% வரமாட்டார். தேர்தலில் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு அளிக்க மாட்டார் என்றும், ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக வரும் தகவல்கள் உண்மை இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அர்ஜுனன் மூர்த்தி கட்சி தொடங்கினால் ரஜினி மக்கள் மன்றத்திற்கும் அவருக்கும் தொடர்பு இல்லை என்றும் சுதாகர் தெரிவித்துள்ளார்.