ரூ.12,110 கோடி தள்ளுபடி..முதல்வருக்கு விவசாய சங்க பிரதிநிதிகள் நன்றி..!
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விதி 110-ன் கீழ் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். கடன் தள்ளுபடி மூலம் 16.43 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது.
நேற்று முதல்வர் அறிவித்த அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. மேலும், விவசாய கடனை முதல்வர் தள்ளுபடி செய்ததற்கு பலர் தரப்பினர் நன்றி தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், விவசாய கடன்களை ரத்து செய்ததற்காக விவசாய சங்க பிரதிநிதிகள் முதல்வரின் இல்லத்துக்கு சென்று நன்றி தெரிவித்துள்ளனர்.