என்னால் 2,153 ஆண்டுகள் உயிர்வாழ முடியும்…! பிரபல தொழிலதிபர் செய்த வியப்பூட்டும் செயல்…!
பயோ ஹேகில் எனும் சிகிச்சை முறையை பயன்படுத்தி 2,153 ஆண்டுகள் வரை வாழ வாய்ப்பு உள்ளதாக தொழிலதிபர் டேவ் ஆஸ்ப்ரே தெரிவித்துள்ளார்.
டேவ் ஆஸ்ப்ரே என்பவர் பிரபலமான தொழிலதிபர். இவருக்கு வயது 41. இவர் 25 ஆயிரம் டாலர் செலவு செய்து, அதாவது இந்திய மதிப்பில் 18 லட்சம் செலவு செய்து தனது எலும்பு மஜ்ஜையில் சில பகுதிகளை நீக்கிவிட்டு, புதிய ஸ்டெம் செல்களை பொருத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் 40 வயது நிறைவு பெற்ற அனைவருமே ஸ்டெம் செல்களை பொருத்திக் கொள்வதன் மூலம் அடுத்த 100 ஆண்டுகள் நல்ல உடல் நலத்துடன் வாழ முடியும் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.
இதைத் தவிர பயோ ஹேகில் எனும் சிகிச்சை முறையை பயன்படுத்தி 2,153 ஆண்டுகள் வரை வாழ வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த தொழிலதிபர், இதற்காக குளிர்ந்த கிரையோதேரபி என்ற சிகிச்சை முறையை பின்பற்றுகிறார். குளிர்ச்சி நிறைந்த குடுவை போல இருக்கும் ஒரு பெட்டியில் மணிக்கணக்காக அமர்ந்துகொண்டு சாப்பிட்டால் இருப்பது போன்ற சில வினோத செயல்களில் சிகிச்சை முறைகளை மேற்கொள்வது போன்ற செயல்பாட்டில் ஈடுபட்டு வருகிறார்.
இவரது செயலால் வியந்து சிலர் இவரிடம், ஏன் இவ்வளவு ஆண்டு வாழ விரும்புகிறீர்கள் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். அதற்கு பதிலளித்த தொழிலதிபர், வாழ்க்கை இன்னும் மேம்படுத்த வேண்டும். 40 ஆண்டுகள் போனதே தெரியவில்லை அதனால் தான் வாழ விரும்புகிறேன் எனக் கூறி மற்றவர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.