அரியர் தேர்வுக்கான அட்டவணை வெளியீடு – அண்ணா பல்கலைக்கழகம்
ரத்து செய்த அரியர் தேர்வுக்கான அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
பிப்.16 முதல் 28-ஆம் தேதி வரை அரியர் தேர்வு நடைபெறுகிறது என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. தமிழக அரசு ஏற்கனவே, அரியர் தேர்வுகளை ரத்து செய்த நிலையில், தற்போது அண்ணா பல்கலைக் கழகம் அட்டவணையை வெளியிட்டுள்ளது. தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான அரியர் தேர்வு அட்டவணை விரைவில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.