மீண்டும் ஒன்று கூடிய பிக்பாஸ் போட்டியாளர்கள்.! வைரலாகும் புகைப்படங்கள்.!
பிக்பாஸ் சீசன்-4 போட்டியாளர்கள் அனைவரும் மீண்டும் ஒன்று கூடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன்-4 ஆனது சமீபத்தில் முடிவடைந்ததும், அதில் நடிகர் ஆரி மக்களின் அதிகப்படியான வாக்குகளை பெற்று டைட்டிலை வென்றார் .அதன் பின் ரன்னராக பாலாஜியும் , மூன்றாவது இடத்தை ரியோவும் பெற்றனர் .இதில் பங்கேற்ற அனைத்து போட்டியாளர்களும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தனர் .
வரும் 7-ம் தேதி நடைபெறவுள்ள பிக்பாஸ் கொண்டாட்டத்தினை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ள நிலையில் பிக்பாஸ் சீசன்-4 போட்டியாளர்கள் அனைவரும் மீண்டும் ஒன்று கூடியுள்ளனர் .ஆம் அர்ச்சனா, ஷிவானி,ரேகா,பாலாஜி, ஜித்தன் ரமேஷ், ரம்யா,சோம்,கேபி ,ரியோ , சுரேஷ் சக்கரவர்த்தி,ஆஜீத், சம்யுக்தா,அனிதா ஆகியோர் ஒன்றாக சேர்ந்து ஜீவா மற்றும் அருள்நிதி நடிப்பில் நேற்றைய தினம் வெளியான களத்தில் சந்திப்போம் படத்தினை ஒன்றாக கண்டு களித்துள்ளனர்.அதனுடன் அவர்கள் அனைவரும் சுரேஷ் சக்கரவர்த்தியின் வீட்டிற்கும் சென்றுள்ளதாகவும் , அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த சுரேஷ் சக்கரவர்த்தி தனது வீட்டிற்கு வந்த அனைவருக்கும் நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார் .இதில் சனம் ,நிஷா ,வேல் முருகன்,ஆரி மற்றும் சுசித்ரா ஆகியோர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.இவர்கள் மீண்டும் இணைந்திருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
View this post on Instagram