‘எனிமி’ படத்தில் இணைந்த விஷால் பட நடிகை.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் எனிமி படத்தில் பிரபல நடிகை மம்தா மோகன்தாஸ் இணைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலா இயக்கத்தில் வெளியான “அவன் இவன் ” படத்தில் இணைந்து நடித்த விஷால் மற்றும் ஆர்யா தற்போது இரண்டாவது முறையாக ‘எனிமி’ எனும் படத்தில் இணைந்து நடித்து வருகின்றார்.இந்த படத்தினைஆனந்த் ஷங்கர் இயக்குகிறார் .இவர் அரிமா நம்பி, இருமுகன், நோட்டா போன்ற படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தில் கருணாகரன்,தமிபி ராமையா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.எஸ்.தமன் இசையமைத்துள்ள இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மிருணாலினி ரவி நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது .ஆனால் ஆர்யாவிற்கு ஜோடியாக நடிப்பது யார் என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை.இந்த நிலையில் தற்போது ஆர்யாவிற்கு ஜோடியாக நடிப்பது யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.அதாவது விஷால்-ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் எனிமி படத்தில் பிரபல நடிகையான மம்தா மோகன்தாஸ் இணைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இவர் ஏற்கனவே தமிழில் சிவப்பதிகாரம், குரு என் ஆளு, தடையறத் தாக்க போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Team #ENEMY welcomes award winning actor and playback singer @mamtamohan #MamtaMohandas on board. #MULTISTARRER @VishalKOfficial @arya_offl @anandshank @vinod_offl @MusicThaman @prakashraaj @mirnaliniravi @RDRajasekar pic.twitter.com/bgXPJgigmw
— Mini Studio (@Mini_StudioOffl) February 5, 2021