பாதி விலைக்கு மொபைல் தருவதாக மோசடி செய்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த காதலர்கள் கைது!

Default Image

விலை உயர்ந்த மொபைல்களை தாங்கள் பாதி விலைக்கு தருவதாகக் கூறி ஃபேஸ்புக் பக்கத்தில் விளம்பரம் செய்து மோசடி செய்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த காதலர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த சுதாகர் என்பவர் முகநூலில் தனக்கு விலை உயர்ந்த ஒன் பிளஸ் போன் பாதி விலைக்கு வாங்கி தருவதாக கூறி 29 ஆயிரத்து 500 ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டதாக அடையாறு சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ளார். இதேபோல புதிய மாடல் விலை உயர்ந்த போன் பாதி விலைக்கு வாங்கி தருகிறோம் என கூறி தன் 2,000 ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக கிண்டி லேபர் காலனி பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் சில தினங்களுக்கு முன்பாக அடையாறு சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளார். தொடர்ச்சியாக அடையாறு சைபர் கிரைமில் இதுபோன்ற புகார்கள் வந்து கொண்டிருப்பதால் இதனை வழக்கு பதிவு செய்த போலீசார் முகநூல் மூலமாக மோசடி செய்த குற்றவாளிகள் யார் என்பதை தனிப்படை அமைத்து தேடி வந்துள்ளனர்.

தற்போது முகநூல் கணக்குகள், பேன் நம்பர் மற்றும் போன் நம்பர்களை வைத்து சோதனை செய்ததில் அப்பகுதியை சேர்ந்த 21 வயதுடைய நளினி என்னும் பெண்ணுடையது என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரித்ததில் அவரது காதலன் அரவிந்த் என்பவர் முகநூல் மூலமாக பாதி விலைக்கு மொபைல் வாங்கி தருவதாகவும் தனக்கு கஸ்டம்சில் உள்ள நபர்களை தெரியும் எனவும் கூறி மோசடி செய்து வந்தது தெரியவந்துள்ளது. அரவிந்த் டிப்ளமோ கேட்டரிங் படித்து முடித்துவிட்டு பணம் சம்பாதிப்பதற்கு முகநூலை மோசடி தளமாக பயன்படுத்தியதும், இதற்கு கூட்டாக தனது 12ஆம் வகுப்பு வரை படித்த காதலியையும் உபயோகித்துக் கொண்டு உள்ளது தெரியவந்துள்ளது. இவ்வாறு பிறரிடம் தாங்கள் பாதி விலைக்கு மொபைல் வாங்கி தருவதாக முகநூலில் வருகிற விளம்பரங்களை வைத்து தங்களிடம் சிக்குபவர்களிடம் பணத்தை வசூல் செய்து விட்டு அதன் பின் நம்பர்களை மாற்றி  வந்துள்ளனர். இதுபோல தொடர்ச்சியாக செய்து தாங்கள் விரும்பிய இடத்திற்கு எல்லாம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த காதலன் மற்றும் காதலி தற்பொழுது அடையாறு சைபர் கிரைமில் பிடிபட்டுள்ளனர்.

இவர்கள் இருவரையும் பிடித்து விசாரித்ததில் ஏற்கனவே கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முகநூல் மோசடியில் ஈடுபட்டு கொடுங்கையூர் காவல் துறையினரால் அரவிந்த் கைது செய்யப்பட்டதும், அவரை அவரது காதலி நளினி ஜாமினில் எடுத்ததும் தெரியவந்துள்ளது. கடந்த மூன்று வருட காலமாக இருவரும் இணைந்து மோசடி செய்து வந்ததும், 50க்கும் மேற்பட்டோர் இவர்களால் பாதிக்கப்பட்டு உள்ளதும், 10 லட்சத்துக்கும் அதிகமாக இவர்கள் மோசடி செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது. தற்போது இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து ஏடிஎம் கார்டுகள், மோசடி செய்ய பயன்படுத்தப்பட்ட சிம் கார்டுகள், மொபைல் போன்கள், இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளதுடன் இருவரையும் சிறையில் அடைத்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil news live
UdhayanidhiStalin
Chennai Super Kings IPL Auction
India won the Test Match
Heavy Rain - cyclone
meena (10) (1)
Red Alert - Heavy Rains