பிறந்த குழந்தைகளை அடிக்கடி தூக்கி வைத்திருப்பது சரியா? தவறா?
பிறந்த குழந்தைகளை அடிக்கடி தூக்கி வைத்திருப்பது சரியா? தவறா?, தூக்கி வைத்திருப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்.
பொதுவாக குழந்தைகளை பார்த்தாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே தூக்க வேண்டும் என்று தான் விரும்புவர். ஆனால், முதியவர்கள் இதுகுறித்து கூறுகையில், குழந்தைகளை அடிக்கடி தூக்கி வைத்திருக்காதீர்கள். இதுவே பழக்கமாக போய்விடும் என்று கூறுவர். தற்போது இந்த பதிவில், பிறந்த குழந்தைகளை அடிக்கடி தூக்கி வைத்திருப்பது சரியா? தவறா?, தூக்கி வைத்திருப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது பற்றி பார்ப்போம்.
குழந்தைகளை அடிக்கடி தூக்கி வைத்திருக்காதீர்கள். இதுவே பழக்கமாக போய்விடும் என்று கூறுவது ஒரு கட்டுக்கதை. பொதுவாக குழந்தைக்கு எப்போது நம்முடைய தேவை இருக்குமோ, அப்போது தான், அந்த குழந்தை அழும். அதன் தேவையை பூர்த்தி செய்ய நாம் தூக்கி வைத்திருப்பது அவசியம்.
அவ்வாறு தூக்கி வைத்திருப்பதால், குழந்தை ஓடி, ஆடி விளையாடாது. அல்லது தூக்கி வைத்துக் கொண்டே இருக்க சொல்லும் என்பதெல்லாம் பொய்யான ஒரு கூற்று. குழந்தைக்கு சுற்று சூழல் மற்றும் குழந்தையின் உடல்நிலை எப்போது நன்றாக இல்லை என உணர்கிறாதோ அப்போது தூக்கி வைத்திருக்க சொல்லி அழும். இவ்வாறு செய்யும் போது, தாய் மற்றும் குழந்தைக்கு இடையிலான பிணைப்பு அதிகமாகும்.
எனவே குழந்தைகளை தூக்கி வைத்திருப்பதில் தவறில்லை. அதிலும் புதிதாக பிறந்த குழந்தைகளை எவ்வளவு நேரம் தூக்கி வைத்திருக்க முடியுமோ, அவ்வளவு நேரம் தூக்கி வைத்திருப்பது நல்லது.