4 மில்லியன் பார்வையாளர்களை பெற்ற மாநாடு டீசர்..!
நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் மாநாடு படத்தின் டீசர் டீசர் யூடியூபில் தற்போது 4 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி,எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் . மாநாடு படத்தில் சிம்பு இஸ்லாமிய இளைஞனான அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மாநாடு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதுடன் படத்திலிருந்து வெளியான பர்ஸ்ட் லுக் , செக்கன்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியவை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இதனை தொடந்து கடந்த 3 ஆம் தேதி இந்த திரைப்படத்திற்கான டீசரை படக்குழுவினர் வெளியிட்டனர். அந்த டீசர் யூடியூபில் தற்போது 4 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை சிம்பு ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
Thanks a lot all for making it #4million views @vp_offl @SilambarasanTR_ @thisisysr @Richardmnathan @Cinemainmygenes @silvastunt @UmeshJKumar @johnmediamanagr https://t.co/vbzz7yQyA1 #maanaadu pic.twitter.com/6MGcGdVQlq
— sureshkamatchi (@sureshkamatchi) February 5, 2021