காத்திருந்து லாரியின் சக்கரத்துக்கு முன்பாக விழுந்து தற்கொலை செய்து கொண்ட நபர்!

நீண்ட நேரமாக காத்திருந்து லாரியின் முன்பதாக விழுந்து தற்கொலை செய்துகொண்ட நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில் பார்ப்போரை பதைபதைக்க செய்துள்ளது.
சென்னை கோயம்பேட்டில் அடையாளம் தெரியாத ஒருவர் கடந்த 2ஆம் தேதி வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்தில் சிக்கி உயிரிழந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு அவரது தலை முழுவதுமாக சிதைந்த நிலையில் இருந்ததால் பாதிக்கப்பட்டவர் யார் என்பது குறித்து சரியாக தெரியவில்லை. இந்நிலையில் விபத்து நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை சோதனை செய்து யார் என அடையாளம் காண்பதற்காக பார்த்த பொழுது அவர் வாகன விபத்தில் சிக்கி உயிர் இழக்கவில்லை வேண்டுமென்றே நீண்ட நேரம் காத்திருந்து தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
நீண்ட நேரமாக ஆட்டோ குட்டியானை எல்லாம் செல்லும்பொழுது காத்திருந்த அவர் லாரி வருவதை கண்டு வேகமாக ஓடிச்சென்று லாரியில் இரண்டாவது சக்கரம் கடக்கும் பொழுது படுத்துள்ளார். இதனால் அவர் மீது லாரி ஏறி அவரது தலை முழுவதுமாகச் சேதம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில் இது பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர் யார் என அடையாளம் தேடப்பட்டு கொண்டிருந்த நபர் தானாக தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்பது தற்பொழுது விசாரணையில் தெரியவந்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வேளாண் பட்ஜெட் 2025 : உழவரைத் தேடி புதிய தொழில்நுட்பங்கள்..,
March 15, 2025
முதல் பரிசு ரூ.1.5 லட்சம்…நவீன கருவிகளை கண்டுபிடிப்பவர்களுக்கு பட்ஜெட்டில் வந்த குட் நியூஸ்!
March 15, 2025
தமிழ் படத்தை இந்தியில் ஏன் டப்பிங் செய்யுறீங்க? பரபரப்பை கிளப்பிய பவன் கல்யாண்..பிரகாஷ் ராஜ் பதிலடி!
March 15, 2025
TNAgriBudget2025 : வேளாண் பட்ஜெட் தாக்கல்…நேரலை அப்டேட் இதோ!
March 15, 2025