நாளை வெளியாகும் “களத்தில் சந்திப்போம்” ..! வெளியான ப்ரோமோ.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
ஜீவா மற்றும் அருள்நிதி இணைந்து நடித்துள்ள களத்தில் சந்திப்போம் திரைப்படம் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்ப்பில் காத்துள்ளார்கள்.
நடிகர் ஜீவா மற்றும் அருள்நிதி இணைந்து நடிப்பில் இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் களத்தில் சந்திப்போம். இந்த திரைப்படத்தினை தயாரிப்பாளர் ஆர். பி. சௌத்ரி தனது சூப்பர் குட்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நடிகை மஜிமா மோகனும் அருள் நீதிக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி ஷங்கரும் நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்திலிருந்து 2 பாடல்களும் டிரைலரும் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாகியது என்றே கூறலாம். இந்த திரைப்படம் நாளை திரையங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்கான ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி படத்தின் மீதுள்ள எதிர்ப்பை அதிகமாக்கியுள்ளதால் நாளை இந்த திரைப்படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளார்கள்.