கடந்த ஆண்டை போல் இந்தாண்டும் வெறும் ஆயிரம் தான் – சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்

தமிழக ரயில் வளர்ச்சித் திட்டங்களுக்கு ரூ.11 ஆயிரம் கோடி தேவைப்படும் நிலையில், வெறும் ரூ.95 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மத்திய பட்ஜெட்டை தொடர்ந்து ரயில்வேயின் வளர்ச்சி திட்டங்களுக்கான பிங்க் புக் இன்று வெளியிடப்பட்டது. அதில், தமிழகத்தின் ரயில் வளர்ச்சித் திட்டங்களுக்கு ரூ.11 ஆயிரம் கோடி தேவைப்படும் போது, வெறும் ரூ.95 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

அதுவும், 208 கோடி தேவைப்படுகின்ற ராமேஸ்வரம் – தனுஷ்கோடி திட்டத்துக்கு 75 கோடியும், மதுரை அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடிக்கு புதிய பாதை திட்டத்தின் 1800 கோடிக்கு, வெறும் 20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களுக்கு இடையேயான திட்டங்களுக்கு தலா வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.

கடந்த ஆண்டும் இதேபோல் புதிய திட்டங்களுக்கு வெறும் ஆயிரம் ரூபாய் ஒதிக்கிருந்ததை நான் கண்டித்தேன். அது தொடர்பாக ரயில்வே வாரியம் தலைவரையும் சந்தித்தேன். ஆனாலும், இந்த ஆண்டும் வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கி இருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்