65-வது தேசிய திரைப்பட விருது:வான் வருவான் பாடலை பாடிய சாஷா திரிபாதிக்கு சிறந்த பாடகிக்கான தேசிய விருது அறிவிப்பு …!
காற்று வெளியிடை திரைப்படத்தில் ‘வான் வருவான்’ பாடலை பாடிய சாஷா திரிபாதிக்கு சிறந்த பாடகிக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் நடிகை பார்வதிக்கு ‘டேக் ஆஃப்’ படத்தில் நடித்ததற்காக , சிறப்புப் பிரிவில் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது மற்றும் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருது டூலெட் படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது . இன்னும் திரைக்கு வராத டூலெட் படத்தை செழியன் இயக்கியுள்ளார்.
மேலும் ‘காற்று வெளியிடை’ திரைப்படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீதேவி நடித்த ‘மாம்’ படத்தின் பின்னணி இசைக்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மேலும் ஒரு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.இதேபோல் மாம் படத்தில் நடித்த ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் வெளியான பாகுபலி 2 படத்திற்கு ஸ்பெஷல் எஃபெக்ட்டுக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காற்று வெளியிடை திரைப்படத்தில் ‘வான் வருவான்’ பாடலை பாடிய சாஷா திரிபாதிக்கு சிறந்த பாடகிக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.