கேரள முதல்வர் நம்பகத்தன்மையை இழந்துவிட்டார் – பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா பேச்சு!
கேரளாவின் முதல்வர் பினராயி விஜயன் நம்பகத்தன்மையை இழந்து விட்டதாகவும் விசாரணை முடிவில் பல அமைச்சர்கள் சிக்குவார்கள் எனவும் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா அவர்கள் தங்க கடத்தல் குறித்து பேசியுள்ளார்.
கேரளா அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக நடைபெற்ற தங்க கடத்தல் குறித்து கேரள மாநிலத்தில் இரண்டு நாள் பயணமாக சென்றுள்ள பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி நட்டா அவர்கள் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியுள்ளார்.
அப்போது பேசிய அவர், முதல்வர் அலுவலகத்தில் நடந்த தங்க கடத்தல் வழக்கு கேரளா மட்டுமல்ல உலகில் வாழக்கூடிய அனைத்து கேரள மக்களுக்கும் தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளதாகவும், கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் தனது நம்பக தன்மையை இழந்து விட்டதாகவும் விசாரணையின் முடிவில் மேலும் பல அமைச்சர்கள் சிக்குவார்கள் அவர்களின் செயல் வெளிச்சத்திற்கு வரும் எனவும் ஜெ.பி நட்டா கூறியுள்ளார்.