இதுவரை பிஸ்கட் கடைல தானே வாங்கிருப்பீங்க..! வீட்ல எப்படி பிஸ்கட் செய்யலாம்னு பார்க்கலாம் வாங்க…!
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பல விதமான பிஸ்கட்டுக்களை கடைகளில் வாங்கி சாப்பிட்டிருப்போம். தற்போது வீட்டிலேயே எவ்வாறு பிஸ்கட் செய்யலாம் என்று பார்ப்போம்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பல விதமான பிஸ்கட்டுக்களை கடைகளில் வாங்கி சாப்பிட்டிருப்போம். தற்போது இந்த பதிவில் வீட்டிலேயே எவ்வாறு பிஸ்கட் செய்யலாம் என்று பார்ப்போம்.
தேவையானவை
- கோதுமை மாவு – கால் கிலோ
- மைதா மாவு – கால் கிலோ
- நெய் – தேவைக்கேற்ப
- சர்க்கரை – 1 கப் (பொடியாக்கியது)
- உப்பு – தேவைக்கேற்ப
- தேங்காய் துருவல் – கால் கப்
செய்முறை
முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில், கோதுமை மாவு, மைதா மாவு, பொடியாக்கிய சர்க்கரை, தேங்காயாய் துருவல், நெய், உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.
பின் பிசைந்து வைத்துள்ள மாவை சப்பாத்தி போல தேய்த்து சிறிய வட்டமாக வெட்டி நெய் தடவிய தட்டில் பரவலாக அடுக்கி வைக்க வேண்டும். பின் அதை வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடேறியவுடன், அதில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்க வேண்டும்.