விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக சமூக ஆர்வலர் கிரேட்டா மற்றும் பாப் பாடகி ரிஹானா!
டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு சர்வதேச சமூக ஆர்வலர் கிரேட்டா மற்றும் அமெரிக்க பாப் பாடகி ரிஹானா ஆகியோர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
டெல்லியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வபோது கலவரங்களாக மாறி வரும் இந்த போராட்டங்களுக்கு தற்போது பலரும் தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் இணைய சேவை துண்டிக்க படும் செய்திக்குறிப்பு ஒன்றை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பிரபல பாப் பாடகி ரிஹானா அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது ஏன் நாம் இன்னும் இது குறித்து பேசவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு நடத்தி வரக்கூடிய ர்வதேச சமூக ஆர்வலரான கிரேட்டா தன்பெர்க் அவர்கள் இந்தியாவில் போராடி வரக்கூடிய விவசாயிகளுடன் நாங்களும் இணைந்து நிற்போம் என பதிவிட்டுள்ளார்.
We stand in solidarity with the #FarmersProtest in India.
https://t.co/tqvR0oHgo0— Greta Thunberg (@GretaThunberg) February 2, 2021
why aren’t we talking about this?! #FarmersProtest https://t.co/obmIlXhK9S
— Rihanna (@rihanna) February 2, 2021