சட்டத்திற்காக மக்களா, மக்களுக்காகச் சட்டமா? -பாமக நிறுவனர் ராமதாஸ்

Default Image

சட்டத்திற்காக மக்களா, மக்களுக்காகச் சட்டமா? என்றும் மக்களுக்காகத் தான் சட்டம் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சட்டத்திற்காக மக்களா? மக்களுக்காகச் சட்டமா? என்றும் மக்களுக்காகத் தான் சட்டம் எனவும் குறிப்பிட்டுள்ளார். அதனால் தான் மக்களின் தேவைகளுக்கு ஏற்ப இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இதுவரை 104 திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, நேற்று கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில், ராமதாஸ், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசும்போது, புதிய திட்டங்களை அறிவிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதைப் பயன்படுத்திக் கொண்டு, தமிழக மக்கள் எதிர்பார்க்கும் மக்கள் நலத் திட்டங்களை முதல்வர் அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்திருந்தார்.

மேலும், ஆளுநரின் சட்டப்பேரவை உரை நிதிநிலை அறிக்கைக்கு முன்னோட்டமாக இருக்கும். அதில் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் இடம் பெறும் என அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்த்திருந்த நிலையில், புதிய அறிவிப்புகள் எதுவும் இடம் பெறாதது மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. அரசின் சேவையை பெற 100 என்ற எண்ணிற்கு தொடர்புகொண்டு மக்கள் தெரிவிக்கும் குறைகள் அனைத்தும் தீர்க்கப்படும் என்ற அறிவிப்பைத் தவிர வேறு புதிய அறிவிப்புகள் எதுவும் இடம் பெறவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்