எவ்வகைத் திணிப்பையும் ஆற்றலோடு எதிர்த்தவர் பேரறிஞர் அண்ணா – மக்கள் நீதி மைய கட்சி தலைவர் கமல் புகழாரம்!
பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு மக்கள் நீதி மைய கட்சியின் தலைவரும் நடிகருமாகிய கமல் அண்ணாவிற்கு புகழாரம் சூட்டி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இன்று பேரறிஞர் அண்ணா அவர்களின் 52 ஆவது நினைவு தினம் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் உள்ள பல்வேறு தலைவர்களும் அண்ணாவின் சிலைக்கு மாலை தூவி மரியாதை செலுத்தி அண்ணாவின் பெருமைகளை பேசி வரும் நிலையில், தற்போது மக்கள் நீதி மைய கட்சியின் தலைவரும் தமிழ் திரை உலகின் நடிகருமாகிய கமலஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் அண்ணா குறித்த பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் எவ்வகை திணிப்பையும் எதிர்த்துப் போராடிய அண்ணாவின் வீரமும் சிந்தனையும் போற்றுதலுக்குரியது எனவும், வணக்கத்திற்குரிய வழிகாட்டியாகிய அண்ணாவுக்கு வந்தனங்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு,
எவ்வகைத் திணிப்பையும் ஆற்றலோடு எதிர்த்த பேரறிஞர் அண்ணாவின் வீரமும், சிந்தனைகளும் போற்றுதலுக்குரியவை. வணக்கத்துக்குரிய வழிகாட்டிக்கு வந்தனங்கள்.
— Kamal Haasan (@ikamalhaasan) February 3, 2021