டாக்டர் படம் எப்போது ரிலீஸ் தெரியுமா? வெளியாகிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படம் வருகிற 26-ஆம் தேதி மார்ச் மாதம் வெளியாகும் என சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சிவகார்த்திகேயன் தமிழ் திரையுலகில் தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அயலான் மற்றும் டாக்டர் ஆகிய இரண்டு படங்களிலும் ஒரே நேரத்தில் நடித்து வந்த சிவகார்த்திகேயன் படப்பிடிப்புகள் அனைத்தும் முழுவதுமாக முடிவடைந்து விட்டதாக அண்மையில் தகவல் வெளியாகியது. அயலான் படத்திற்கு மட்டும் சில கிராபிக்ஸ் பணிகள் இருக்கிறது என்று கூறப்பட்டது. இயக்குனர் நெல்சன் திலிப்குமர் அவர்களின் இயக்கத்தில் அனிருத் ரவிச்சந்திரன் அவர்களின் இசையமைப்பில் உருவாகிய சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் எப்போது வெளியாகும் என அவரது ரசிகர்கள் பலராலும் கேள்வி எழுப்பப்பட்டு வந்தது.
இந்த படத்துக்கான அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி விரைவிலஅறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப் பட்டுக்கொண்டிருந்தது. இந்நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக தற்போது சிவகார்த்திகேயன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, டாக்டர் படம் வருகிற மார்ச் மாதம் 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இந்த செய்தி சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதோ அந்த பதிவு,
#DOCTORfromMarch26 ???????? pic.twitter.com/ot1PHocA2K
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) February 3, 2021