கருவில் வளரும் குழந்தைக்கு கூட இரட்டை இலை பிடிக்கும் -முதல்வர் பழனிசாமி
கர்ப்பிணிகளுக்கான உதவித் தொகை அதிகரித்து வழங்கியுள்ளதால், கருவில் வளரும் குழந்தைக்கு கூட இரட்டை இலையை பிடிக்குமென பழனிசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.
மதுரையில் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் வலையர் வாழ்வுரிமை மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், விவசாயி என்பதில்தான் பெருமை அடைவதாகவும், விவசாயிகளுக்கு அரசின் திட்டங்கள் சிந்தாமல் சிதறாமல் சென்றடைவதை அதிமுக உறுதி செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு அதிமுக அரசு அடித்தளமாக இருந்துள்ளதை சுட்டிக்காட்டிப் பேசினார். கர்ப்பிணிகளுக்கான உதவித் தொகை அதிகரித்து வழங்கியுள்ளதால், கருவில் வளரும் குழந்தைக்கு கூட இரட்டை இலையை பிடிக்குமென பழனிசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.