2020-ம் ஆண்டில் ஜம்மு காஷ்மீரில் 221 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொலை..!
2020-ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் எல்லைகளில் பாதுகாப்பு படையினரால் 221 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
ஜனவரி 29ம் தத்தி நடைபெற்ற நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் எழுத்து பூர்வமாக சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், எல்லையில் நடந்த அத்துமீறல்கள், தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படை வீரர்களின் எண்ணிக்கை மற்றும் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் எண்ணிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
அந்த அறிக்கையில், 2020-ஆம் ஆண்டு போர் நிறுத்த விதிமுறைகளை மீறி ஜம்மு காஷ்மீர் எல்லையில் நடத்தப்பட்ட 5,133 தாக்குதல்களில் பொதுமக்கள் 22 பேரும், பாதுகாப்புப் படை வீரர்கள் 24 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும் ஜம்மு காஷ்மீர் பகுதியில் 2020ஆம் ஆண்டு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களில், 244 தாக்குதலில் 37 பேர் பொதுமக்களும், பாதுகாப்பு படை வீரர்கள் 62 பேரும், பாதுகாப்புப் படையினர் தாக்குதலில் தீவிரவாதிகள் 221 பேரும் உயிரிழந்து உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.