4 இயக்குனர்கள் இணைந்து இயக்கிய ‘குட்டி லவ் ஸ்டோரி’.!பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
குட்டி லவ் ஸ்டோரி வெப் தொடரின் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் பிப்ரவரி 12ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீப காலமாக ஓடிடி தளத்திற்காக பிரபல இயக்குனர்களும் , பிரபலங்களும் வெப் தொடரில் நடித்தும் இயக்கியும் வருகின்றனர்.சமீபத்தில் கூட பிரபல இயக்குனர்கள் இணைந்து இயக்கிய பாவ கதைகள் என்ற வெப் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது .
இந்த நிலையில் தற்போது ஓடிடி தளத்திற்காக உருவாகியுள்ள ‘குட்டி லவ் ஸ்டோரி’ வெப் தொடரின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது .4 பகுதிகளாக உருவாகியுள்ள இந்த ஆந்தலாஜி வெப் தொடரினை பிரபல இயக்குனர்களான கௌதம் மேனன், விஜய், வெங்கட் பிரபு மற்றும் நலன் குமாரசாமி ஆகியோர் இணைந்து இயக்கி உள்ளனர் .இதில் நலன்குமாரசாமி இயக்கியுள்ள பகுதியில் விஜய் விஜய்சேதுபதி மற்றும் அதிதி பாலன் ஆகியோர் நடித்துள்ளனர். அதேபோல் கௌதம் மேனன் இயக்கிய பகுதியில் கௌதம் மேனன் மற்றும் அமலாபால் நடித்துள்ளனர்.மேலும் வருண் மற்றும் மேகா ஆகாஷ் பகுதியை விஜய்யும், சாக்சி அகர்வால் பகுதியை வெங்கட்பிரபுவும் இயக்கியுள்ளனர்.
இந்த நிலையில் தற்போது குட்டி லவ் ஸ்டோரி வெப் தொடரை வரும் பிப்ரவரி 12ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளதுடன் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.4 இயக்குனர்கள் இயக்கத்தில் விஜய் சேதுபதி உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள இந்த வெப் தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
#KuttiStory anthology.
Dir by #NalanKumaraswamy#KuttiStoryFromFeb12#ItsAllAboutLove @AditiBalan @sreekar_prasad @IshariKGanesh @VelsFilmIntl @shammysaga @Ashkum19 @DoneChannel1 pic.twitter.com/P0TrDvM66E
— VijaySethupathi (@VijaySethuOffl) February 1, 2021