தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடர்ந்து நீடிக்கும் – ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர், கலைவாணர் அரங்கில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது.ஆளுநர் பேசுகையில்,தமிழகம் தொடர்ந்து 3 முறை நல்லாளுமைக்கான விருதை பெற்றுள்ளது.முதலமைச்சர் பழனிசாமியின் சிறப்பான நிர்வாகத்தை காட்டுகிறது.தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது.
முல்லை பெரியாற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு கேரள அரசுக்கு அனுமதி வழங்க கூடாது என மத்திய அரசிடம் வலியுறுத்தப்படுகிறது.நாட்டிலேயே பிரத்யேகமாக ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையை கையாண்ட ஒரே மாநிலம் தமிழகம் தான்.7.5% இட ஒதுக்கீட்டால் .அரசு பள்ளி மாணவர்கள் 435 பேர் இந்த ஆண்டு பயனடைந்துள்ளனர்.இருமொழி கொள்கையை தொடர்ந்து பின்பற்றுவதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது.
காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு எந்த அணையும் கட்டக்கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்துவோம்.அத்திக்கடவு – அவினாசி திட்டத்திற்கான முதல் கட்ட பணிகள் மார்ச் மாதத்திற்குள் நிறைவேற்றப்படும் என்று பேசியுள்ளார்.