அருண் விஜய் படத்தில் இணைந்த ஆடுகளம் பிரபலம்.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தில் ஆடுகளம் பிரபலமான ஜெயபாலன் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் அருண் விஜய்யின் 33வது திரைப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கவுள்ளார். இது அவருக்கு 16வது திரைப்படமாகும் இந்த திரைப்படத்தை ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கவுள்ளது. இந்த திரைப்படத்துக்கான படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தை வருகின்ற ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளார்.அதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் ,யோகி பாபு,கேஜிஎஃப் பிரபலமான ராமசந்திரராஜூ , ராதிகா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது .
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் ஆடுகளம் படத்தில் நடித்த நடிகர் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதாவது ஹரி – அருண் விஜய் கூட்டணியில் உருவாகும் படத்தில் ஆடுகளம் உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த ஜெயபாலன் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Aadukalam fame #Jayapalan part of ours #AV33 & #Hari16 #DirectorHARI@DrumsticksProd @arunvijayno1 @priya_Bshankar @iYogibabu @prakashraaj @realradikaa @GarudaRaam @0014arun @ertviji @clusters_media @johnsoncinepro @CtcMediaboy pic.twitter.com/dJqhtoGZnT
— Drumsticks Productions (@DrumsticksProd) February 1, 2021