வித்தியாசமான முறையில் 60 அடி ஆழத்தில் கடலுக்கடியில் நடைபெற்ற கல்யாணம்!

Default Image

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடலுக்கடியில் 60 கிலோ மீட்டர் ஆழத்தில் நடைபெற்ற புதுமண தம்பதிகளின் வித்தியாசமான திருமணம் வாழ்த்துக்களை பெற்று வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நீலாங்கரை எனும் பகுதியில் உள்ள ஜோடிகள் இருவர் இந்து முறைப்படி கடலுக்கு அடியில் 60 கிலோ மீட்டர் ஆழத்தில் மாலை மாற்றிக்கொண்டு வித்தியாசமான முறையில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். தனது திருமணத்தை வித்தியாசமாக நடத்த வேண்டும் என ஆசைப்பட்ட திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சின்னமலை ஸ்வேதா எனும் கோவையை சேர்ந்த பெண்ணுடன் நிச்சயம் ஆனதும் ஆழ்கடல் பயிற்சி பெற்ற ஒருவரிடம் தனது ஆசையை கூறி கடலுக்கு அடியில் திருமணம் செய்வதற்கான பயிற்சிகளைப் பெற்று உள்ளார்.

அதன்பின் இன்று தான் பெற்ற பயிற்சிகளின் அடிப்படையில் தனது விருப்பப்படி வித்தியாசமான முறையில் அறுபது அடி ஆழத்தில் கடலுக்கடியில் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில், புதுமண ஜோடிகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்