ஆடல், பாடலுடன் பிரமாண்டமாக நடைபெறும் பிக்பாஸ் கொண்டாட்டம்.!ஷார்ப்பா இத்தனை மணிக்கு வாங்க.! புரோமோ வீடியோ உள்ளே.!
பிக்பாஸ் கொண்டாட்டமானது வரும் பிப்ரவரி 7-ம் தேதி மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாக புரோமோ வீடியோவுடன் அறிவித்துள்ளனர்.
பிக்பாஸ் சீசன்-4 ஆனது சமீபத்தில் முடிவடைந்ததும், அதில் நடிகர் ஆரி மக்களின் அதிகப்படியான வாக்குகளை பெற்று டைட்டிலை வென்றார் .அதன் பின் ரன்னராக பாலாஜியும் , மூன்றாவது இடத்தை ரியோவும் பெற்றனர் .
சமீபத்தில் பிரமாண்டமாக கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் அதற்கு அடுத்தப்படியாக பிக்பாஸ் கொண்டாட்டம் நடைபெற உள்ளது . வழக்கமாக நடக்கும் இந்த பிக்பாஸ் கொண்டாட்டத்தில் ஆடல் ,பாடல் என அனைத்து போட்டியாளர்களும் கலந்து கொள்வார்கள்.அந்த வகையில் இந்த சீசனுக்கான கொண்டாட்டத்திலும் அனைத்து போட்டியாளர்களும் கலந்து கொண்டுள்ளனர் . அவர்கள் அனைவரும் எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிக்பாஸ் கொண்டாட்டத்திற்கான புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது . பிப்ரவரி 7-ம் தேதி மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள இந்த பிக்பாஸ் கொண்டாட்டத்தில் ஒவ்வொரு பிக்பாஸ் போட்டியாளர்களின் ரசிகர்களும் வருகை தந்து அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர் .அதனையடுத்து ஒவ்வொருவரும் தனது பிக்பாஸ் அனுபவங்களை பகிர்ந்து ஆடல் , பாடல் என பிரமாண்டமாக நடைபெறவுள்ளது .இதோ அந்த புரோமோ வீடியோ