‘ஆதிபுருஷ்’ படத்தில் பிரபாஸூக்கு அம்மாவாக நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகை.?

இராமாயணத்தை தழுவி உருவாகும் பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ படத்தில் ராமரின் அம்மாவான கவுசல்யா கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகையான ஹேமமாலினி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தன்ஹாஜி எனும் படத்தின் மூலம் பிரபலமான ஓம் ராவத் , சமீபத்தில் பிரபாஸ் அவர்களை வைத்து பிரமாண்ட படம் ஒன்றை இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது.’ஆதிபுருஷ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தினை 3டி தொழில்நுட்பத்தில் பெரும் பட்ஜெட்டில் உருவாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.
மேலும் பூஷண் குமார் தயாரிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம்,இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ,பிற சர்வதேச மொழிகளில் டப்பிங் செய்ய உள்ளதாகவும் கூறப்பட்டது .மேலும் ஆதிபுருஷ் திரைப்படம் ராமாயணம் கதையை தழுவி படமாக்க உள்ளதாகவும் ,அதில் பிரபாஸ் ராமனாகவும் ,சைஃப் அலிகான் ராவணனாகவும் ,சீதையாக கிருத்தி சனோனும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது .
மேலும் இந்த படத்தினை இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக இயக்குனர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் விரைவில் படப்பிடிப்பை தொடங்கவுள்ள ஆதிபுருஷ் படத்தினை குறித்த புது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.அதாவது ராமரின் அம்மாவான கவுசல்யா கதாபாத்திரத்தில் ஒரு காலத்தில் பிரபல பாலிவுட் நடிகையாக வலம் வந்த ஹேமமாலினியை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.இந்த தகவல் எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.
லேட்டஸ்ட் செய்திகள்
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025