தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது- ராமதாஸ் ட்விட் ..!
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2019 ஜனவரியில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டது.
துறை ரீதியான நடவடிக்கை, வழக்குகளை திரும்ப பெறக்கோரி கோரிக்கை வைத்த நிலையில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து செய்வதாக இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டரில் பத்திவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ஏழாவது ஊதியக்குழு ஊதிய உயர்வு நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிய அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள், ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
ஏழாவது ஊதியக்குழு ஊதிய உயர்வு நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிய அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள், ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது!(1/3)
— Dr S RAMADOSS (@drramadoss) February 1, 2021
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்; ஒழுங்கு நடவடிக்கைகளை திரும்பப் பெற வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. முதற்கட்டமாக ஒழுங்கு நடவடிக்கைகள் திரும்பப்பெறப்பட்டதில் மகிழ்ச்சி.
அடுத்தக்கட்டமாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதிய உயர்வு நிலுவைத் தொகை, பழைய ஓய்வூதியத் திட்டம், ஊதிய முரண்பாடுகளைக் களைதல் உள்ளிட்ட கோரிக்கைகளையும் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்!(3/3)@CMOTamilNadu
— Dr S RAMADOSS (@drramadoss) February 1, 2021
அடுத்தக்கட்டமாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதிய உயர்வு நிலுவைத் தொகை, பழைய ஓய்வூதியத் திட்டம், ஊதிய முரண்பாடுகளைக் களைதல் உள்ளிட்ட கோரிக்கைகளையும் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.