#BREAKING: பட்ஜெட் தாக்கல்..! எதிர்க்கட்சி நாடாளுமன்றத்தில் அமளி..!
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார். இன்று நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வது 3-வது பட்ஜெட் இதுவாகும். வழக்கமாக பட்ஜெட் தாள்கள் மூலம் தாக்கல் செய்யப்படும், ஆனால் இந்த முறை வித்தியாசமாக முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய தொடங்கியபோது, நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்கள் தொடர்பாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர்.