நான் சும்மாவிடமாட்டேன்., பகிரங்கமாக என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் – முக ஸ்டாலின் ஆவேசம்
ஆரணியில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உதவுவதாக தாங்கள் நாடகமாடுவதாக கூறும், அதிமுக ஐடி பிரிவு தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி நசரத்பேட்டையில் இன்று நடைபெற்ற ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்ற திமுக தலைவர் முக ஸ்டாலின், மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் பேசிய அவர், தான் வேலை வாங்கி அரசியல் செய்து வருவதாக அதிமுக பேசி வருகிறது. திமுக ஒருபோதும் கடவுளை வெறுக்கவில்லை.
ஆரணியில் பாதிக்கப்பட்ட எழிலரசி என்ற பெண்ணுக்கு திமுக நடவடிக்கை எடுத்த பிறகே அதிமுக அரசு உதவியதாகவும், அதனை ஆதாரமுடன் நிரூபிக்க தயார் எனவும் முக ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், அதிமுகவின் ஐடி பிரிவு கூறுகிறது, ஸ்டாலின் நாடகம் நடத்துகிறார், யாரும் நம்பவேண்டாம், நாங்க இரண்டு மாதத்திற்கு முன்பு நிதியுதவி வழங்கிவிட்டோம் என்று கூறுகிறார்கள்.
என்னிடம் ஆதாரம் இருக்கிறது, நான் இதனை நிரூபிக்க தயாராக இருக்கிறேன். உண்மையில் அதிமுக ஐடி பிரிவிற்கு தெம்பு இருந்தால், என் மீது வழக்கு போடட்டும். எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் எடுத்த நடவடிக்கையை விமர்சனம் செய்கிறார்கள். நான் கூறுவது தவறாக இருந்தால் மன்னிப்பு கேட்கிறேன். உண்மையாக இருந்தால், அதிமுக ஐடி பிரிவு பகிரங்கமாக என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் நான் சும்மாவிடமாட்டேன், நீதிமன்றக்கு சென்று அவர்களை வழக்கு மன்றத்தில் சந்திப்பேன் என ஆவேசமாக தெரிவித்துள்ளார்.