‘நானே வருவேன்’ படத்தின் சூப்பர் அப்டேட்டை கொடுத்த செல்வராகவன்.!
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் “நானே வருவேன்” படத்திற்காக யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் பணிகளை தொடங்கியுள்ளதாக செல்வராகவன் அறிவித்துள்ளார்.
தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியில் ஆயிரத்தில் ஒருவன்-2 மற்றும் நானே வருவேன் ஆகிய படங்கள் உருவாகவுள்ளது.இதில் ஆயிரத்தில் ஒருவன்-2 படத்தினை 2024-ம் ஆண்டு தான் ரிலீஸ் செய்யப்படும் என்று செல்வராகவன் சமீபத்தில் அறிவித்திருந்தார்.அதனை தொடர்ந்து நானே வருவேன் படத்திற்கான டைட்டில் போஸ்டரும் சமீபத்தில் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.
2021-ம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ள இந்த திரைப்படத்தில் ஜீப் என்ற வாகனம் முக்கிய கதாப்பாத்திரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.மேலும் இந்த படத்தினை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் . செல்வராகவன் மற்றும் யுவன் கூட்டணியில் ஏற்கனவே துள்ளுவதே இளமை, புதுப்பேட்டை,காதல் கொண்டேன் பல படங்கள் வெளியானதும், அந்த படங்களில் உள்ள பாடல்கள் அனைத்தும் இன்றும் ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்டில் இருக்கும் என்றும் கூறலாம் .இதே கூட்டணி நானே வருவேன் படத்திலும் இணைந்துள்ளது ரசிகர்களைடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது நானே வருவேன் படத்தினை குறித்த முக்கிய அப்டேட்டை செல்வராகவன் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.அதாவது நானே வருவேன் படத்திற்காக யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் பணிகளை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.
OMG ! What a song he composed for #NaaneVaruven #littlemaestro@thisisysr @theVcreations @Arvindkrsna pic.twitter.com/p6lbgQwJe7
— selvaraghavan (@selvaraghavan) January 31, 2021