சீமான்,வைரமுத்து, பாரதிராஜா, திருமாவளவன் மீது கொலை முயற்சி வழக்கு தொடரப்பட வேண்டும்…!ஹெச்.ராஜா ஆவேசம் …!

Default Image

பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, வைரமுத்து, பாரதிராஜா, கௌதமன், அமீர், திருமுருகன் காந்தி, திருமாவளவன், சீமான் என அனைவரின் மீதும் கொலை முயற்சி வழக்கு தொடரப்பட வேண்டும் என்று  காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்தாமல் மத்திய அரசு தாமதம் செய்து வருவதாக குற்றம்சாட்டியும் உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கோரியும் தமிழக்தில் உள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டியை நடத்த எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் பல்வேறு அரசியல் கட்சிகளும், தமிழ் அமைப்புகளும் அண்ணா சாலை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளில் போராட்டம் நடத்தின. போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஆதரவாளர்கள் சிலர் செருப்புகளை மைதானத்துக்குள் எறிந்தனர்.

மேலும், சென்னை பல்லாவரம் சங்கர் நகர் காவல்நிலைய முதல்நிலைக் காவலர் செந்தில்குமார் மற்றும் ஆயுதப்படை காவலர் ஜெயசந்திரன் ஆகியோர் போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து காவலர் செந்தில்குமார் அளித்த புகாரின்பேரில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 10 பேரை கைது போலீஸார் சிறையில் அடைத்தனர்.

காவலர் செந்தில்குமார் தாக்கப்பட்டபோது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அருகில் இருப்பது வீடியோவில் பதிவானதைத் தொடர்ந்து சீமான் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது

இந்நிலையில் இது தொடர்பாக இன்று தன் ட்விட்டர் பக்கத்தில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார். அதில், ”ஐபிஎல்க்கு எதிரான போராட்டம் என்று வன்முறையைத் தூண்டி பேசியவர் சீமான் மட்டுமல்ல. வைரமுத்து, பாரதிராஜா, கௌதமன், அமீர், தி.மு.காந்தி, திருமாவளவன் அனைவருமே ஆகும். எனவே கொலை முயற்சி வழக்கு இவர்கள் அனைவர் மீதும் தொடரப்பட வேண்டும்” என்று காட்டமாகப் பதிலளித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்