#BreakingNews : 9,11 வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்க அனுமதி
பிப்ரவரி 8ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்புக்கும், 11ஆம் வகுப்புக்கும் பள்ளிகளில் வகுப்புகள் நடைபெறும் என்று அறிவிக்கபட்டுள்ளது.
கடந்த மாதம் தமிழகத்தில் ஜனவரி 31-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.எனவே தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் வருகின்ற 31-ஆம் தேதி நள்ளிரவு வரை பொது ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் புதிய தளர்வுகளுடன் பொது ஊரடங்கு பிப்ரவரி 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.மேலும் பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்புகளுக்கு வகுப்புகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.