வலிமை திரைப்படத்தின் தரமான அப்டேட்.. கொண்டாடும் தல ரசிகர்கள்..!

ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அடுத்த வாரம் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் தற்போது வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார்.போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தினை நேர் கொண்ட பார்வை படத்தின் வெற்றியை அடுத்து இந்த கூட்டணி வலிமை படத்தில் இணைந்துள்ளது .அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது .
மேலும் இந்த படத்தில் ஹூமா குரேஷூ நாயகியாகவும் ,கார்த்திகேயா வில்லனாகவும்,அம்மாவாக நடிகை சுமித்ராவும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் யோகி பாபு,பேர்லி மன்னி,குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் . யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பானது சவுத் ஆப்பிரிக்காவில் நடத்த உள்ளதாக கூறப்பட்டிருந்தது.
தற்போது வலிமை படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் அப்டேட்க்காக ரசிகர்கள் கிடையாய் கிடக்கின்றனர் .சமூக வலைத்தளங்கள் அப்டேட் கேட்டு வரும் தல ரசிகர்களுக்கு தற்போது அற்புதமான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது வலிமை படத்தின் மொத்த படப்பிடிப்பு இன்னும் மூன்று நாட்களிள் முடிந்து விடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதைபோல் படப்பிடிப்பு முடிந்த பிறகு வலிமை படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த அப்டேட் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் தற்போது அஜித் ரசிகர்கள் மிகவும் உற்சாகமாக உள்ளார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
தமிழகத்தில் அடுத்தடுத்து பாலியல் பயங்கரம்! 3 வயது குழந்தை முதல்.., குழந்தைக்கு தாய் வரை..,
February 25, 2025
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
February 25, 2025
வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!
February 25, 2025