கருணாநிதி கருப்புச் சட்டையால் இனி திமுகவிற்கு என்றுமே இருண்ட காலம்தான்”…!ஹெச்.ராஜா
பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா ஸ்டாலினின் நடை பயணம் ஏமாற்று வேலை. இனி திமுகவுக்கு இருண்ட காலம்தான் என்று ட்விட்டரில் விமர்சித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கடையடைப்பு, மோடியின் சென்னை வருகைக்கு எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளார். இதற்கிடையே காவிரி உரிமை மீட்புப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், ஸ்டாலினின் செயல்பாடுகளை எச்.ராஜா விமர்சித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ”1967-ல் திமுக ஆட்சிக்கு வந்த போது காவிரியில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆனால் இன்று காவிரியில் ஸ்டாலின் மேடை போட்டு பொதுக்கூட்டம் பேசுகிறார். காவிரி வறண்டு போயுள்ளது. இதற்கு மோடி அரசு காரணமா. ஸ்டாலின் நடை பயணம் ஏமாற்று வேலை. வெட்கக்கேடு” என்று விமர்சித்துள்ளார்.
மேலும், மோடியின் சென்னை வருகையை எதிர்த்து திமுக தலைவர் கருணாநிதி கருப்புச் சட்டை அணிந்திருக்கும் செய்தியைக் குறிப்பிட்ட எச்.ராஜா, ”இனி திமுகவிற்கு என்றுமே இருண்ட காலம்தான்” என்றும் காட்டமாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.