ஆறாவதாக தனது பாடிகார்டை திருமணம் செய்த ஹாலிவுட் நடிகை பமிலா ஆண்டர்சன்!
ஹாலிவுட்டின் பிரபல நடிகை ஏற்கனவே 5 திருமணங்கள் செய்திருக்க கூடிய நிலையில், தற்பொழுது ஆறாவதாக தனது பார்டிகார்டையே திருமணம் செய்து கொண்டுள்ளார்.
ஹாலிவுட் திரையுலகின் பிரபல நடிகை தான் பமீலா ஆண்டர்சன். இவருக்கு உலகம் முழுவதிலும் பல கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு. 53 வயதாகும் இவர் தனது சமூக வலைதள பக்கங்களில் எப்பொழுது ஆக்ட்டிவாக இருப்பவர், அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இனி தான் இயற்கையுடன் இணைந்து வாழப்போவதாகவும்,இது தான் எனது கடைசி போஸ்ட் எனவும் பமீலா ஒரு போஸ்ட் போடா அவரது ரசிகர்கள், கரணம் தெரியாமல் திக்குமுக்காடினார். ஆனால், இப்பொழுது தான் தெரிய வருகிறது பாமீலாவுக்கு அடுத்த திருமணம் ஆகிவிட்டதாம்.
அப்படியென்றால் இரண்டாவது திருமணம் அல்ல, இத்துடன் அவர் ஆறாவது திருமணம் செய்துகொண்டுள்ளாராம். அதுவும் இப்போ கிடையாதாம், கடந்த வருட இறுதியில் கிறிஸ்துமஸுக்கு முன்தினம் தனது பார்டி கார்டையே திருமணம் செய்துள்ளார், அவருடன் கடந்த ஒருவருடமாக தனக்கு பழக்கம் ஏற்பட்டதாகவும், ஆனால், 7 ஜென்மம் அவருடன் வாழ்ந்த உணர்வு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர், இனி தனது புதிய கணவருடன் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ உள்ளதாக தெரிவித்துள்ளார். அரை கிழவி ஆகிய பின்பு ஆறாவது திருமணமா என பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.