கருப்பை பிரச்சனை நீக்கும் துரியன் பழம்… தொடர்ச்சியாக எடுத்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்!
அரிதாகவே நமக்கு தெரியக்கூடிய பழவகைகளில் ஒன்றான துரியன் பழம் சாப்பிடுவதால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் எவ்வளவு நன்மைகள் உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
துரியன் பழத்தின் நன்மைகள்
துரியன் பழமா? அப்படியென்றால் என்ன என வியப்பவர்களும் இருக்கலாம், ஏனென்றால் இந்த பழம் குறித்து பலரும் அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. பார்ப்பதற்கு பலா பழத்தின் தோற்றத்தை கொண்டுள்ள இந்த துரியன் பழத்தை சாப்பிடுவதால் பெண்கள் மட்டுமல்லாமல், ஆண்களுக்கும் பல நன்மைகள் கிடைக்கும். காரணம் இந்த பழம் மிகுந்த ஆற்றல் கொண்ட ஒன்றாகும். பெண்கள் கருப்பை பிரச்சனையால் அவதிப்படுபவர்களாக இருக்கும் பட்சத்தில் நிச்சயம் நீங்கள் இந்த பழத்தை சாப்பிடலாம்.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியத்தையும், கருப்பை நோய் உள்ளவர்கள் அந்த குறைபாடுகளையும் சரி செய்யும் தன்மை கொண்டது இந்த துரியன் பழம். ஆண்கள் விந்தணு குறைபாட்டினை தீர்க்க இந்த பலத்தினை எடுத்து கொள்ளலாம். முள்நாறி எனவும் அழைக்கப்படக்கூடிய இந்த பழத்தில் கால்சியம், கரோட்டின், கொழுப்பு, இரும்புசத்து, கார்போஹைட்ரேட், தாமிரம் மற்றும் போலிக் ஆசிட் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளது. நீரிழிவு நோய் வராமல் தடுக்க உதவுவதுடன், இந்த பழத்தினை தொடர்ந்து சாப்பிடுவதால் எலும்பு மண்டலத்தையும் வலுப்பெற செய்கிறது.