பிக்பாஸ் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் செய்தி.! இந்த நாளில தான் பிக்பாஸ் கொண்டாட்டம் டெலிகாஸ்ட் ஆகிறதா .?

Default Image

பிக்பாஸ் கொண்டாட்டம் ஆனது வரும் பிப்ரவரி 7-ம் தேதி ஒளிபரப்பப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் சீசன்-4 ஆனது சமீபத்தில் முடிவடைந்ததும், அதில் நடிகர் ஆரி மக்களின் அதிகப்படியான வாக்குகளை பெற்று டைட்டிலை வென்றார் .அதன் பின் ரன்னராக பாலாஜியும் , மூன்றாவது இடத்தை ரியோவும் பெற்றனர் . சமீபத்தில் பிரமாண்டமாக கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் அதற்கு அடுத்தப்படியாக பிக்பாஸ் கொண்டாட்டம் நடைபெற உள்ளது . வழக்கமாக நடக்கும் இந்த பிக்பாஸ் கொண்டாட்டத்தில் ஆடல் ,பாடல் என அனைத்து போட்டியாளர்களும் கலந்து கொள்வார்கள்.அந்த வகையில் இந்த சீசனுக்கான கொண்டாட்டத்திலும் அனைத்து போட்டியாளர்களும் கலந்து கொண்டுள்ளனர் . அவர்கள் அனைவரும் எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் கொண்டாட்டம் ஒளிப்பரப்பாகும் நாள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.அதாவது பிக்பாஸ் சீசன்-4க்கான பிக்பாஸ் கொண்டாட்டம் வரும் பிப்ரவரி 7-ம் தேதி விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்