ஹரி-அருண் விஜய் படத்தில் இணைந்த பிரபல காமெடி நடிகர்.!
ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தில் பிரபல நடிகரான யோகி பாபு இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் அருண் விஜய்யின் 33வது திரைப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கவுள்ளார். இது அவருக்கு 16வது திரைப்படமாகும் இந்த திரைப்படத்தை ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கவுள்ளது. இந்த திரைப்படத்துக்கான படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தை வருகின்ற ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளார்.அதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.இந்த நிலையில் தற்போது அருண் விஜய் நடிப்பில் உருவாகும் அவரது 33-வது படத்தில் நடிகர் யோகி பாபு இணைந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.ஏற்கனவே பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகிபாபு அருண் விஜய் படத்திலும் இணைந்துள்ளதை அடுத்து வாங்க நண்பர் யோகி கலக்கலாம் என்று அருண் விஜய் அவரை வரவேற்றுள்ளார் .
வாங்க நண்பர் யோகி, கலக்கலாம்!! @iYogiBabu #AV33 https://t.co/jWf1LNitDN
— ArunVijay (@arunvijayno1) January 29, 2021