அரண்மனை-3 படத்தில் நடிகர்களாக அறிமுகமாகும் இரு பாடகர்கள்.? குஷ்பு கூறிய சூப்பர் தகவல்.!
அரண்மனை 3 படத்தில் பிரபல பாடகர்களான ஹரிஹரன் மற்றும் சங்கர் மகாதேவன் ஆகிய இருவரும் இந்த படத்தில் பாடலை பாடியுள்ளதுடன் நடித்துள்ளதாகவும் குஷ்பு தெரிவித்துள்ளார்.
சுந்தர் சி இயக்கத்தில் ஏற்கனவே இரண்டு பாகங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்த திரைப்படம் அரண்மனை.தற்போது இதன் மூன்றாவது பாகம் தயாராகி வருகிறது.
சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள அரண்மனை 3 படத்தில் ஆர்யா ஹீரோவாக நடிக்கிறார்.அவருடன் ராஷி கன்னா, ஆண்ட்ரியா,சாக்ஷி , விவேக்,யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் . சமீபத்தில் மீண்டும் படப்பிடிப்பை தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது.இந்த நிலையில் தற்போது திரையுலகில் முன்னணி பாடகர்களாக விளங்கும் இருவர் இந்த படத்தில் நடித்து நடிகர்களாக அறிமுகமாகி உள்ளதாக குஷ்பு தெரிவித்துள்ளார்.
அதாவது பிரபல பாடகர்களான ஹரிஹரன் மற்றும் சங்கர் மகாதேவன் ஆகிய இருவரும் இந்த படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளதுடன்,இந்த பாடலுக்கு அவர்களே நடித்துள்ளதாகவும் அரண்மனை 3 படத்தின் தயாரிப்பாளரான குஷ்பு தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களுடன் பதிவு செய்து தெரிவித்துள்ளார்.
What a pleasure and honor to have two legends @SingerHariharan and @Shankar_Live on board for our prestigious project #Aranmanai3 as actors, performing for their songs. Thank you so much for agreeing to be with us. #SundarC ❤❤❤❤❤???????????????? pic.twitter.com/XSCEYjcgmd
— KhushbuSundar ❤️ (@khushsundar) January 29, 2021