போராடி வரும் விவசாயிகளின் கருத்தை கேட்க அரசு தயார் – பிரதமர் மோடி
போராடி வரும் விவசாயிகளின் கருத்தை கேட்க அரசு தயாராக உள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் 2 மாதத்திற்கு மேலாக விவசாய அமைப்பினர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.மத்திய அரசு தரப்பில் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் பேச்சுவார்த்தை தோல்வியிலே முடிந்தது.தொடர்ந்து விவசாயிகள் பல்வேறு விதமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனிடையே நேற்று நாடாளுமன்ற கூட்டத் தொடர் துவங்கிய நிலையில், இன்று பிரதமர் மோடி அவர்களின் தலைமையில் காணொலி வாயிலாக அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் , வேளாண் சட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி, விவசாயிகளின் கருத்தை கேட்க அரசு தயாராக உள்ளது என பிரதமர் மோடி கூறியதாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.மேலும் விவசாயிகள் பிரச்சினையை இந்திய அரசு திறந்த மனதுடன் அணுகுவதாக பிரதமர் மோடி உறுதியளித்தாகவும் தெரிவித்துள்ளார்.