மிஷ்கினின் ‘பிசாசு-2’ படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்.!
மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் பிசாசு 2 படத்தின் படப்பிடிப்பு தைப்பூச நாளான நேற்று முதல் தொடங்கியுள்ளது.
சைக்கோ படத்தின் வெற்றிக்கு பின் இயக்குனர் மிஷ்கின் இயக்கும் திரைப்படம் பிசாசு 2.ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் சார்பில் T.முருகானந்தம் பிரமாண்டமாக தயாரித்து வரும் இந்த படத்தில் ஆண்ட்ரியா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.அவருடன் நடிகை பூர்ணா நடிக்கவுள்ளார்.
கார்த்திக் ராஜா இசையமைக்கும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் பூஜை சமீபத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பை தைப்பூச நாளான நேற்று திண்டுக்கல்லில் தொடங்கியுள்ளனர் .அதற்காக திண்டுக்கல்லில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.