வதந்திகளை நம்ப வேண்டாம் – இயக்குனர் பாண்டிராஜ் ட்வீட்..!
நடிகர் சூர்யாவின் 40 வது திரைப்படத்தை குறித்து வெளிவரும் வதந்திகளை நம்பவேண்டாம் என்று இயக்குனர் பாண்டிராஜ் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யாவின் 40 வது திரைப்படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்குவுதாகவும் அந்த படத்தை சன் பிக்சர்ஸ்ர் நிறுவனம் தயாரிப்பதாகவும் கடந்த ஆண்டு அறிவித்திருந்தனர். அதனை தொடர்ந்து டி இமான் இசையமைக்கும் இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடிப்பதாக நேற்று அறிவித்தனர். இதனை சூர்யா ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்டுகிறது. மேலும் தற்போது சமூக வலைத்தளங்களில் சூர்யாவின் 40 வது திரைப்படத்தில் அவரது கெட்டப் குறித்த தகவல் வெளியாகிவருகின்றது. அந்த வகையில் சூர்யா ரசிகர்கள் ஒருவர் சூர்யா 40 படத்தில் 5 கெட்டப்களில் சூர்யா நடிப்பதாக கூறப்படுகிறது. அதில் ஒரு ரோல் தமிழக முதலைமைச்சராம் என்று பதிவிட்டுள்ளார். இதற்கு பதிலளித்த இயக்குனர் பாண்டிராஜ் “வதந்திகளை நம்ப வேண்டாம்” என்று பதிவிட்டுள்ளார்.
வதந்திகளை நம்ப வேண்டாம் ????
Today 12 .00 pm oru update
irukku . enjoy ???? #Suriya40 ???? https://t.co/7pZq0ZoLF9— Pandiraj (@pandiraj_dir) January 29, 2021