ஓடிடியில் இத்தனை கோடிக்கு வியாபாரம் ஆனதா மாஸ்டர்.? ஆனால் முதலிடம் இந்த படமா.?

மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் ரூ.36 கோடிக்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்து வருகிறது.மேலும் இந்த படத்தினை வீட்டிலிருந்தே பார்க்கும் வகையில் இன்று முதல் ஓடிடி தளமான அமேசான் பிரேமில் வெளியாகியுள்ளது .
அதன் படி மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் ரூ.36 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.ஆனால் ஓடிடியில் வெளியாகி அதிகம் வியாபாரமான படம் என்றால் அது ரஜினியின் 2.0 தான் .ஆம் அந்த திரைப்படம் ரூ.54 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளது.அதனையடுத்து இரண்டாவது இடத்தில் சூர்யாவின் சூரரை போற்று ரூ.42கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.