‘அண்ணாத்த’ ரிலீஸுக்கு முன்பே வெளியாகிறதா ‘தளபதி 65’.!சூப்பர் தகவல் இதோ..!
தளபதி65 படத்தினை ஆயுத பூஜையை முன்னிட்டு ரிலீஸ் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் முன்னணி நடிகர்களான ரஜினி மற்றும் விஜய்யின் இரு படங்கள் உருவாக உள்ளது.அதில் ஒன்று சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த.இதன் 40% படப்பிடிப்பு மட்டுமே மீதமிருப்பதாக கூறப்பட்ட நிலையில் படத்தினை தீபாவளி தினத்தன்று வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.எனவே நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகவுள்ள ‘தளபதி65’ படத்தின் ரிலீஸ் தள்ளி போனதாகவும் ,ஒரே நாளில் இரண்டையும் செய்ய இயலாத காரணத்தால் தளபதி-65 படத்தினை அடுத்தாண்டு பொங்கல் விருந்தாக வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் தற்போது வெளியான தகவலின்படி அண்ணாத்த படத்தின் ரிலீஸ்க்கு முன்பே தளபதி 65 படத்தினை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் ,அதாவது தளபதி விஜய் தயாரிப்பாளரிடம் இந்த ஆண்டே தளபதி-65 படத்தினை வெளியிட கோரிக்கை வைத்ததாகவும் , அதன்படி இந்தாண்டு ஆயுத பூஜையை முன்னிட்டு படத்தினை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் முதல் தொடங்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் , தளபதி 65 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.