எப்போவருவேன் எப்படி வருவேன்னு தெரியாது, ஆனா வரவேண்டிய நேரத்துக்கு கரெக்ட் ஆ வருவேன் :- சாம்சங் கேலக்ஸி மினி..!!
சீன தரச்சான்றிதழ் வலைத்தளமான டிஇஎன்ஏஏ வழியாக கசிந்துள்ள ஒரு தகவலில், கேலக்ஸி எஸ்9 மினி வடிவிலான ஒரு சிறிய ஸ்மார்ட்போன் காணப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கீக்பெஞ்ச் தளத்தில், மாடல் எண் SM-G8750 என்ற பெயரின் கீழ் காணப்பட்ட அதே சாம்சங் கேலக்ஸி எஸ்9 மினி தான் என்று கூறப்படுகிறது.
ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ ஓஎஸ் வெளியான தகவலின் படி, எஸ்9 மினி ஆனது ஸ்னாப்டிராகன் 660 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் மற்றும் 4ஜிபி அளவிலான ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ ஓஎஸ் கொண்டு இயங்கும். இந்த ஸ்மார்ட்போன் அதன், சிங்கிள்-கோர் டெஸ்டில் 1619 மதிப்பெண்களையும், மல்டி-கோர் டெஸ்டில் 5955 மதிப்பெண்களையும் பெற்றுள்ளது.
அதன் முதல் தோற்றம் எனினும், TENAA தளத்தில் மாடல் எண் SM-G8850 என்கிற பெயரின்கீழ் பட்டியலிடப்பட்ட இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் தான், வரவிருக்கும் கேலக்ஸி எஸ்9 மினி என்றால், அதன் முதல் தோற்றத்தையும், ஸ்மார்ட்போனின் சில முக்கிய குறிப்பையும் வெளிப்படுத்தியுள்ள முதல் நம்பத்தகுந்த லீக்ஸ் இதுதான்.
எட்ஜ்-டூ-எட்ஜ் ஸ்க்ரீன் வடிவமைப்பு முன்னர் வெளியான கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9+ போன்றே தான், எஸ்9 மினி ஸ்மார்ட்போனும் கிளாஸ் மற்றும் மெட்டல் சாண்ட்விச் வடிவமைப்பை கொண்டு வருகிறது.
சாம்சங் லோகோவிற்கு மேலே முன்னர் வெளியான தவல்களின்படி, எஸ்9 மினி ஆனது அதன் பின்புற பேனலின் இடது மூலையில் செங்குத்தான வடிவமைப்பின் கீழ் இணைக்கப்பட்டுள்ள்ள டூயல் பின்புற கேமராக்களை கொண்டு வரும். உடன் சாம்சங் லோகோவிற்கு மேலே பதிக்கப்பட்டுள்ள ஒரு கைரேகை ஸ்கேனரையும் கொண்டிருக்கும்.
5.6 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே கேமரா தொகுதிக்கு கீழே ஒரு எல்இடி பிளாஷையும் காண முடிகிறது. மேலும் ஸ்மார்ட்போனின் இடது பக்கத்தில் ஒரு பிரத்யேக Bixby பட்டனும், பவர் பாட்டனும் இருக்க, மறுபக்கம் வால்யூம் கட்டுப்பாடு பட்டன்கள் இடம் பெற்றுளளன.
டிஸ்பிளேவை பொறுத்தவரை, எஸ்9 மினி ஆனது வட்டமான மூலைகள் கொண்ட, க்வாட் எச்டி+ (2960 x 1440 பிக்ஸல்) தீர்மானம் கொண்ட 5.6 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே கொண்டிருக்கும். மைக்ரோ எஸ்டி ஸ்லாட் ஒரு 2.8GHz ஆக்டா-கோர் செயலி உடனான 4ஜிபி ரேம் / 6 ஜிபி ரேம் கொண்டு இயங்கும்.
எஸ்9 மினி ஆனது இரண்டு 12எம்பி கேமரா என்கிற டூயல் கேமரா அமைப்பை கொண்டிருக்கும், இவைகள் டூயல் அப்பெர்ஷர் அம்சம் இல்லாமல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செல்பீக்களுக்காக, முன் பக்கத்தில் ஒரு 8எம்பி கேமரா கொண்டுள்ளது. கேலக்ஸி எஸ்9 மினி ஆனது (அதாவது கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனில் இருப்பது போன்றே) ஒரு 3000mAh பேட்டரி கொண்டு இயங்கலாம்.