தஞ்சை பெரிய கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது…!! சித்திரை திருவிழா…!!!
வரலாற்று சிறப்புமிக்க தஞ்சை பெரியகோவிலின் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நந்தி, விளக்கு, மாடு பொறிக்கப்பட்ட கொடிக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதி பூஜை செய்தனர்.
பின்னர், நந்தி மண்டபம் முன்பு அமைந்துள்ள கொடி மரத்தில், சிவகணங்கள் இசைக்க, ஓதுவார்கள் திருமுறை பாடி கொடியேற்றப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரைத் திருத்தேரோட்டம் ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெறுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்